வட சென்னையில் பரபரப்பு.!! திமுக அமைச்சரை சுத்து போட்ட பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் 4வது நாளாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் நீர் துரைப்பாக்கம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மக்கள் வெளியேற முடியாமல் உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்துள்ளனர். 

அதேபோன்று கேகே நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் வடசென்னை பகுதியில் மீட்பு பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் காட்டி வருகின்றனர். 

குறிப்பாக வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய இடங்களில் வெள்ள நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வட சென்னை மக்களை கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வண்ணாரப்பேட்டை பகுதி மக்களிடம் குறைகளை கேட்கச் சென்றார்.

அப்போது சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்திலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அமைச்சர் சேகர்பாபுவை பொதுமக்களில் முற்றுகைப் போராட்டத்தில் இருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தோற்றுக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Chennai people besieged Minister SekarBabu and protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->