ட்ராமா ஓவர்.. ஓவர்..! திருமாவளவனை கிழித்தெடுத்த இடும்பாவனம்! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் தற்போது கையில் எடுத்துள்ள மதுவிலக்குமற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் ஸ்டண்ட் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

விசிக வைத்த இரண்டு கோரிக்கைகளையும் திமுக நினைத்தால் நாளையே செய்ய முடியும். அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டு நிறைவேற்றி இருக்க முடியும். அதை நேரடியாக அறிவாலயம் சென்றே கோரிக்கை வைத்து இருக்கலாம்.

அதை விடுத்தது, மாநாடு, x போஸ்ட் என்று ஒரு விளம்பர அரசியல் செய்ததுடன், திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும், அதிமுக அல்லது விஜயின் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதாக ஊடகங்களை பேச வைத்து வேடிக்கை பார்த்து இருக்கிறார் என்பது இன்று உறுதியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் தான் இருப்போம், மதுவிலக்கை கோருவோம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தால் அது குறித்து பேச மாட்டோம் என்று திருமாவளவன் இன்று பேட்டி அளித்துள்ளார். 

இந்த நிலையில், திருமாவளவனின் இந்த சர்ச்சையான செயல்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார். அதன் விவரம் பின்வருமாறு:

முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க அண்ணன் திருமாவளவன் போனதுக்குப் பதிலா, 'அட்மின்' போயிருந்தா கூட்டணி ஆட்சிய பத்திப் பேசியிருப்பாரோ என்னவோ?!

மாநில அரசின் அதிகார வரம்பில் இருக்கும் 'மது விலக்கு' குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டுமென வலியுறுத்துவது மாநிலத் தன்னாட்சிக்கு எதிரானதில்லையா திருமா அண்ணே?

மது விலக்கைச் செயல்படுத்த மாநில அரசுகளின் கைகளிலேயே அதிகாரம் இருக்கும்போது மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டுமெனக் கோருவது ஒற்றையாட்சிக்கும், அதிகாரக் குவிப்புக்கும் ஆதரவானதுதானே?

விடுதலைச்சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதியையும், டி.கே.எஸ்.இளங்கோவனையும் பங்கேற்கச் செய்வதுபோல, விசிக முன்பு நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் எச்.ராஜாவையும், அண்ணாமலையையும் பங்கேற்கச் செய்திருக்கலாம்.

வாய்ப்பைத் தவற விட்டுட்டீங்க திருமா அண்ணே!

மதவாதத்துக்கு எதிராக ஒரு மாநாடு போட்டு, அதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து, மதவெறிக்கு எதிராக சர்வதேச அளவில் ஒரு மசோதாவைக் கொண்டுவர ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் திருமா அண்ணே!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Idumbavanam karthik condemn to VCK Tirumalavan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->