எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும்... அச்சம் கிடையாது - சீமான் ஆவேசம்!
NTK Seeman campaign
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரத்தின் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, எவ்வளவு நெருக்கடிகள் அழுத்தங்கள் கொடுத்தாலும் அது எங்களை ஆவேசப்படுத்தும் அரசியல் படுத்துமே தவிர அச்சப்படுத்தாது.
சிதைந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை மீட்டெடுக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். பல ஆண்டுகாலமாக நம் தாய்மொழி சிதைந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
எங்கள் சின்னத்தை கூட ஒலிவாங்கி என்று கூறினால் மக்களுக்கு புரியாத நிலைமை மைக் என சொல்ல வேண்ட நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க நம் மொழிக்காக உரிமைக்காக நின்று நிற்கின்றார்களா? இலங்கை கடற்படையினர் எத்தனை படகுகளையும் மீனவர்களையும் கைது செய்துள்ளார்கள். ஆனால் அதற்கு ஒரு தீர்வு கொண்டு வந்தது உண்டா என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.