திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் எனது கொள்கை - சீமான் மீண்டும் பரபரப்பு பேட்டி!
NTK Seeman Condemn to Periyar and dravidian
மறைந்த திராவிட கழக தலைவர் பெரியார் (ஈ.வெ.இராமசாமி) குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையான முறையில் பேசியதாக, பெரியார் ஆதரவாளர்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.
சென்னையில் சீமான் வீட்டிற்கு செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரியார் ஆதரவாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து விளக்கம் அளித்ததுடன், மீண்டும் பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், பெரியார் குறித்து கருணாநிதி எழுதிய புத்தகங்களை அரசுடமையாக்கி வைத்துக் கொண்டு ஆதாரம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்னிடம்.
தமிழர்கள், தமிழர் என்று பேசினால் எதிரியா? யார் தான் திராவிடர்? நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை.
தமிழை சனியன் என்று பேசியவர் பெரியார். இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர்கள் என்றவர் பெரியார். இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்கள் எதிரியா நமக்கு?
எல்லா தேசிய இனத்திற்கும் வரலாறு பண்பாடு தருவது மொழி தான். திராவிடம் பேசிய எங்களை ஒழித்து விட்டார்கள். வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? காலத்திற்கு ஏற்றது போல மாற வேண்டும். பெரியாரை எதிர்ப்பதும் திராவிடத்தை ஒழிப்பதும் தான் எனது கொள்கை" என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
NTK Seeman Condemn to Periyar and dravidian