அதானியுடன் கள்ள உறவில் இருக்கும் திமுக அரசு! உண்மையைச் சொன்ன ஐயா ராமதாசு மீது பாய்வதா? கிழித்தெடுத்த சீமான்! - Seithipunal
Seithipunal


திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்குமான உறவு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா மருத்துவர் ராமதாசு அவர்கள் விடுத்த அறிக்கையை முன்வைத்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐயா ராமதாசு அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், சமூக நீதிக்காகப் பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ஐயா ராமதாசு அவர்களைச் சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகமாகும்.

முதல்வர் ஸ்டாலினின் திடீர் கோபத்திற்குக் காரணமென்ன? அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ஐயா ராமதாசு? அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாகப் பதற்றமடைவதேன்? 

இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியைச் சந்தித்தீர்களா? எனும் கேள்விக்கு, ‘ஆம்! இல்லை!’ எனும் பதிலைக் கூறாது, ‘அவருக்கு வேறு வேலையில்லை’ எனக் கூறி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுதானா? 

பதில் சொல்ல நேர்மையற்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேள்வி கேட்ட ஐயா ராமதாசு அவர்களை நோக்கி, ‘வேலையில்லை’ எனப் பாய்வது அரசியல் அறம்தானா? 

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தாரே ஐயா ஸ்டாலின், அப்போது வேலையில்லாதுதான் அறிக்கைகளை விடுத்தாரா? 

“எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்” எனக் கேட்டாரே, அப்போது வேலையில்லாதுதான் அரசியல் செய்தாரா?

அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இருக்கிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இப்போதுவரை வாய்திறக்க மறுப்பதேன்? 

அதானி இலஞ்சம் கொடுத்தாரெனும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? இல்லை! மறுக்கிறீர்களா? 

ஏற்கிறீர்களென்றால், அதானி குழுமத்திடமிருந்து தமிழ்நாட்டில் இலஞ்சம் வாங்கியது யார்? பதில் சொல்லுங்கள் முதல்வரே! 

ஐயா ராமதாசு அவர்கள் கூறியதுபோல, அதானியை ரகசியமாக இல்லத்தில் சந்திக்க வேண்டிய தேவையென்ன வந்தது?

“அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் ஏதும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடவில்லை” என விளக்கம் கொடுக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி. அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டதாக யாருமே கூறவில்லையே! 

இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி மையத்திடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டதே, அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துதான் என்பதுதானே குற்றச்சாட்டு. அதற்கு திமுக அரசின் கருத்தென்ன? 

இவ்விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் மௌனத்துக்கானக் காரணத்தை நாடும், ஏடும் அறியும். மோடியின் அரசியலை எதிர்ப்பதாகக் கோரும் முதல்வர் ஸ்டாலினும் இச்சிக்கலில் அமைதி காப்பதேன்? 

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி, நாளும் வாய்ப்பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் அடக்கி வாசிப்பதேன்? 

‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாய வேண்டிய முதல்வர் ஸ்டாலின், உண்மையைச் சொன்ன ஐயா ராமதாசு மீது பாய்வதன் அரசியலென்ன? 

அதானியுடன் பாஜக அரசு நேரிடையான உறவில் இருக்கிறதென்றால், திமுக அரசு கள்ள உறவில் இருக்கிறதென்பதைத்தானே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

ஆகவே, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கெளதம் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டுமெனவும், ஐயா ராமதாசு அவர்கள் குறித்தான  பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Conden to DMK Adani Scam MK Stalin PMK Ramadoss issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->