வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து வெற்றி பெறும் - ஓ. பன்னீர்செல்வம்.! - Seithipunal
Seithipunal


வருகிற 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒருங்கிணைந்து உறுதியாக வெற்றி பெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவரின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அங்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்று, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நிறுவும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் எடுக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o panneerselvam pressmeet about 2026 assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->