ஒடிசாவில் இன்று பதவியேற்கும் முதல்வருக்கு வந்த புதிய சிக்கல்! - Seithipunal
Seithipunal



நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து முதலமைச்சராக பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சருக்கு இன்னும் அரசு இல்லமும், அலுவலகமும் ஒதுக்கப் படவில்லை. 

இதற்கு காரணமாக கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசா முதலமைச்சராக இருந்து பிஜூ ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் தனது சொந்த இல்லமான நவீன் நிவாஸில் இருந்து தான் மாநில அரசின் பணிகளை மேற்கொண்டார். அவர் முதன் முதலில் 2000ம் ஆண்டு ஒடிசா முதலமைச்சராக பதவி ஏற்றபோது, அரசாங்கம் முதலமைச்சருக்காக ஒதுக்கிய இல்லத்தை நவீன் பட்நாயக் தவிர்த்து விட்டார்.

ஒரு மாநில முதல்வர் அரசாங்கம் வழங்கிய இல்லத்தை தவிர்த்து, தனது சொந்த வீட்டில் இருந்தே அரசின் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டது அரசியல் வரலாற்றிலேயே ஒரு தனித்துவமான முடிவாக அப்போது பேசப்பட்டது. இதுவே இப்போது ஒடிசா பாஜகவிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

நவீன் பட்நாயக் இதுவரை அரசு பணிகளுக்கென்று பிரத்தியேகமான இல்லமோ, அலுவலகமோ உபயோகித்திராத நிலையில், தற்போது பதவியேற்க உள்ள பாஜகவின் புதிய முதலமைச்சர் மோகன் சரண் மாஜி க்கு பொருத்தமான உத்தியோகபூர்வமான இல்லத்தை தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. 

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஒடிசாவில் உள்ள ஜனதா மைதானத்தில் மோகன் சரண் மாஜி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisas New CM Facing New Problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->