இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை?...நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும் - எம்.பி சசி தரூர்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் செயல்பட்டு  தனியார் நிறுவனத்தில், கேரளா மாநிலம், கொச்சியைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பட்டயக் கணக்காளராக பணிபுரிந்து வந்த நிலையில், என்பவர் பணி அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில், அன்னா  அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவருக்கு ​உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சக ஊழியர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வௌியிட்டுள்ள பதிவில், வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை இருக்கக் கூடாது என்றும், இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும்  அரசு மற்றும் தனியார் துறைகளில் ஊழியர்களை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும், வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் அதிகமாக வேலை செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Only 5 days work in a week now Law will be brought in Parliament MP Sasi Tharoor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->