பெருமகிழ்ச்சி அடைகிறேன் - ஓபிஎஸ்., கொண்டாடுவோம் -டிடிவி..! அடுத்தடுத்து வந்த செய்தி.! - Seithipunal
Seithipunal


இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் கொண்டாடப்படுகிறது. விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத்திறனாளிகளை மதித்து நடத்திட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னதில் தமிழக முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக தனி இயக்கத்தையே தொடங்கியவர் மாண்புமிகு அம்மா என்பதை நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

#InternationalDayOfPeopleWithDisability தினத்தில், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் உயர உதவிபுரிவோம் என உறுதியேற்போம்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத்திறனாளிகளை மதித்து நடத்திடுவோம்.

உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில் அவர்கள் சாதனைகள் புரிந்திட ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திடுவோம். 

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தநாளில் உறுதியேற்றிடுவோம். மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS and TTV Wish International Day Of People With Disability


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->