மாஸ் காட்டும் ஓபிஎஸ் அணியினர்... 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு...!!
OPS announced 118 member for Erode East byelection
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். மேலும் பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தார்மீக அடிப்படையில் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகரன் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவித்தால் நாங்கள் பாஜக வேட்பாளரை ஆதரிக்க தயாராக உள்ளோம் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்குழு தலைவராக வைத்திலிங்கம் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 118 தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ளனர். இது குறித்தான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
English Summary
OPS announced 118 member for Erode East byelection