ஓபிஎஸ் மாநாடு | கடும் எதிர்ப்பு, தேனி பெரியகுளத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!
OPS Maanadu Periyakulam ADMK Complaint
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி (நாளை மறுநாள்) திருச்சியில் மிகப்பெரிய ஒரு தர்மயுத்தம் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில்தமிழகத்தின் தென் பகுதிகளில் இருந்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வத்தில் இந்த மாநாட்டில் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் திருச்சி மாநாட்டிற்காக பெரிய குளத்தில் வைத்திருந்த பேனர்களை தற்போது போலீசார் அகற்றி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேனி, பெரிய குளத்தில் ஓ பன்னீர்செல்வம் மாநாடு பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மாநாடு பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் இருந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையத்தில் அதிமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.
English Summary
OPS Maanadu Periyakulam ADMK Complaint