அதிமுகவில் திடீர் பரபரப்பு.. சூடு பிடித்த வழக்கு.. தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை.!
OPS son Jayapradeep Fb Post Viral
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே பெரும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதனுடைய வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்வதில் அவரது ஆதரவாளர்கள் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனுடைய அதிமுக பொது குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. இதனுடைய கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணை சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், கொரநாடு விவகாரத்தில் நீதி வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பதிவில், கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன்னேறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அதிமுக உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடன் கேட்டு கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
English Summary
OPS son Jayapradeep Fb Post Viral