இது என்ன காதல் கடிதம்..? வாங்க மாட்டேன் என சொல்ல.. பழனிச்சாமியை கலாய்த்த புகழேந்தி..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. பொதுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகைக்கு கடிதம் அனுப்பினார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என யாரும் கிடையாது என அந்த கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பியது. அதற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணம் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் இருக்கிறது என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி பேசியதாவது "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது.

அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா..? வாங்க மாட்டேன் என்று திருப்பி அனுப்புவதற்கு. எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்துவிட்டு அவரின் தலைமையை ஏற்றுக் கொள்ளட்டும்" என பெங்களூரு புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக தலைமை கடிதத்தை திருப்பி அனுப்பிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team criticized for returning election commission letter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->