அதிமுக எடப்பாடி பழனிசாமியிடம் தான் இருக்கு! பேட்டியின் போதே சம்பவம்!
OPS TTV Joint against ADMK EPS
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், ''ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இருவரும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளார்கள்.
கடந்த காலங்களை பற்றி பேசினால் பேதங்கள் தான் உண்டாகும். இனி எதிர்காலத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனிய நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும்.
எடப்பாடி பழனிச்சாமி தான் யாரையும் சேர்க்க மாட்டேன் என்கிறார். சமூக விரோத கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்பதே ஓபிஎஸ்-டிடிவி தினகரனின் பொதுநோக்கமாக இருக்கும்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். (பேச்சுவாக்கில் அதிமுக தங்கள் வசம் இல்லை என்பதை போட்டு உடைத்துவிட்டார்)
ஓபிஎஸ் தெரிவிக்கையில், "அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதால், நாங்கள் தற்போது இணைந்துள்ளோம். சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விரைவில் அவரையும் சந்திப்பேன். தொண்டர்கள், மக்கள் மனதில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "அதிமுகவை மீட்க ஓ பன்னீர் செல்வமும் நானும் ஒன்றிணைந்துள்ளோம். இருவரிடையே மனதளவில் பகை உணர்வு எதுவும் இல்லை.
இந்த இணைப்பில் சுயநலம் எதுவும் இல்லை. ஆணவத்துடன் அரக்கர்கள் போல் செயல்படும் நபர்களிடமிருந்து அதிமுகவை மீட்க உள்ளோம். அதிமுகவை மீட்டு ஜெயலலிதா தொண்டர்களிடம் ஒப்படைக்க இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறதோ, அதேபோல நாங்கள் இருவரும் செயல்படுவோம்.
நாங்கள் இருவரும் நேரில் சந்திக்கவில்லையே தவிர அடிக்கடி தொலைபேசிகள் பேசிக்கொண்டு தான் இருந்தோம். ஓ பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில் கூட கையை பிடித்தபடி செல்ல முடியும். ஆனால் பழனிச்சாமியை நம்பி செல்ல முடியுமா? என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
English Summary
OPS TTV Joint against ADMK EPS