பத்மஸ்ரீ விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பு.! அதிர்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள்.!
PadmaAwards2022
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை புறக்கணிப்பதாக மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, டாடா குழுமத் தலைவர் சந்திர சேகரன், கூகுள் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 21 பேருக்கு பத்மபூஷன் உட்பட 122 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், விமான விபத்தில் காலமான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் தாமோதரன், நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, கலைத்துறையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள், ஏ.கே.சி. நடராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை புறக்கணிப்பதாக திடீரென மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.
அதற்கான காரணம் எதுவும் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. இவரின் இந்த அறிவுப்பு அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.