பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தப்படுகிறது.

4 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற்றும் IND-GJ-25-MM-1582 என்ற பதிவெண்கள் கொண்ட இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றபோது, 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும் பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளது.

பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Pakistan arrest tamil fishermen TN chief minister MK Stalin letter to central minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->