#பாகிஸ்தான் || மர்ம நபர்களால் இந்து கோவில் சூறை.! தொடரும் மதவெறியர்களின் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், கராச்சி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இந்து கோயில் ஒன்று அடித்து சூறையாடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையாக வசிக்கும் இந்து உள்ளிட்டவர்களின் மத தளங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

மேலும், சிறுபான்மையாக வசிக்கும் இந்து உள்ளிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது 

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் இந்துகள் குறைவாக வசிக்ககூடிய கொரங்கி பகுதியில், இன்று மாரி மாதா மந்திர் கோயில்  அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் அனுமன் சிலைகள் உள்ளிட்ட சில சிலைகள் சேதமடைந்தன. இதுகுறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, 

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கோயிலைத் தாக்கி சேதப்படுத்தியதாகவும், தடுக்க முயற்சி செய்தவர்களையும் தாக்க வந்ததாக அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan karachi hindu temple attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->