மீண்டும் மஞ்சள் பை: பசுமைத் தாயகத்தின் 20 ஆண்டு கோரிக்கை!
pasumai thayakam say about manjai pai
பசுமை தயக்கம் சார்பாக பாமக அருள் இரத்தினம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கத்தான் 'மஞ்சள் பை' முன்னெடுப்பைத் தொடங்குகிறோம்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
இதே கோரிக்கைக்காக கடந்த 20 ஆண்டுகளாக பாடுபடுபவர் மருத்துவர் அய்யா இராமதாஸ் அவர்கள் ஆகும்.
அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக 2002 ஆம் ஆண்டில் (ஜூலை 25, பசுமைத் தாயகம் நாள்) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னை மெரீனா கடற்கரையில் பசுமைத் தாயகம் பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரம்;
2012 ஆம் ஆண்டில் (ஜூன் 5, சுற்றுச்சூழல் நாள்) மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம்;
2018 ஆம் ஆண்டில் (அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள்) பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் "பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கும் பிரச்சாரம்";
2019 ஆம் ஆண்டில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் "பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் முகாம்" என பல நிகழ்ச்சிகளை பசுமைத் தாயகம் அமைப்பு நெகிழி ஒழிப்புக்காக நடத்தியுள்ளது. இவையெல்லாம் சில எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள் தான்.
இப்போதாவது நெகிழி ஒழிப்பை தீவிரமாக முன்வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதாகும். அதைவிட முக்கியமாக தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை தமிழக அரசு முழுவதுமாக செயல்படுத்த வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
pasumai thayakam say about manjai pai