மிரட்டல்! மாநாடு முடிந்து முதல் வழக்கு! அபிராமபுரம் போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் என்று சொல்வதைவிட, 234 தொகுதிகளிலிருந்தும் தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் சுமார் 50 ஆயிரம் வாகனங்களில் வந்து பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொள்கை தலைவர்களை விஜய் அறிவித்துள்ளார். மேலும், பாஜக, திமுக தான் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் எதிரிகள் என்றும் விஜய் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநாட்டுக்கு அழைத்துச் சென்று வாடகை பணத்தை கொடுக்கவில்லை என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டுக்காக அழைத்துச் சென்ற கார் வாடகை ரூபாய் 85 ஆயிரத்தை தர முடியாது என, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மோகன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu Car Driver Complaint


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->