பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த மோப்ப நாய்! மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த மோப்ப நாய்க்கு இந்திய ராணுவத்தினரால் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பிரிவில், பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கிடையிலான மோதலில், திங்கள்கிழமை இரவு ‘பாண்டோம்’ என்ற மோப்பநாய் உயிர்துறந்தது. 

‘பாண்டோம்’-ன் இந்த துணிச்சலையும், உயிர் தியாகத்தையும் போற்றும் வகையில், இந்திய ராணுவம் சார்பில் ‘பாண்டோம்’ உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இராணுவம் தரப்பில் வெளியான தகவலின்படி, 4 வயதான ‘பாண்டோம்’ ‘பெல்ஜியன் மலிநோய்ஸ்’ இனத்தைச் சேர்ந்தது. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் போது குண்டு தாக்கி உயிரிழந்தது. ராணுவத்தில் சேவையாற்றிய இந்த மோப்பநாயின் உடல், மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்டு, இன்று உதம்பூரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian army Dog Death in shoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->