இது அயோக்கியத்தனம், ஒரு உயிரை கொன்று சுய விளம்பரம் தேடும் அளவிற்கா கேடு கெட்டு போய் விட்டீர்கள் - அறப்போர் இயக்கம் கேள்வி!  - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் சரவணன் (வயது 36).

இவர் இன்று 31.10.2024 அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சாலைகளில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கும் அயோக்கியத்தனத்தை செய்ய எப்படி மனம் வருகிறது? என்று, தமிழக முதல்வருக்கும், காவல்துறைக்கும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்த அறப்போர் இயக்கத்தின் செய்திக்குறிப்பில், "சாலைகளில் கொடி கம்பங்கள் வைத்து விளம்பரம் தேடும் ஒவ்வொருவரும் இந்த கொலைக்கு உடந்தை. இனியாவது உங்கள் முட்டாள்தனத்தை உணருங்கள். ‌ சாலைகளில் கொடி கம்பங்கள் வைக்கும் ஆபத்தான செயலை தடுத்து நிறுத்துங்கள். 

இன்னும் எத்தனை காவலர்கள் உயிர் போனால் நீங்க ரோஷம் வந்து சாலைகளில் கொடி வைக்கும் கபடதாரிகளை கைது செய்வீர்கள்? 

சட்டத்தை மீறி சாலைகளில் அரசியல் கட்சிகள் வைக்கும் கொடி கம்பங்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்க வெட்கமாகவே இருக்காதா போலீஸ்கார்..? 


 
ஆபத்து என்று தெரிந்தும் அதை செய்யும், செய்ய அனுமதிக்கும் முட்டாள்தனத்திற்கு எப்பொழுது முடிவு வரும்? 

சாலைகளில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கும் அயோக்கியத்தனத்தை செய்ய எப்படி மனம் வருகிறது? அடுத்தவர்கள் உயிரை கொன்று சுய விளம்பரம் தேடும் அளவிற்கா கேடு கெட்டு போய் விட்டீர்கள்" என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pasumpon Police SI Death issue Arappor Condemn to CM MK Stalin and TNpolice


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->