திமுக அமைச்சரை மேடையில் வைத்தே கேள்விகளால் கிழித்த திமுக எம்எல்ஏ.,! தடுக்க வந்த எம்எல்ஏ.,வுக்கும் ஏத்து!
pattukottai DMK Minister and DMK MLA speech issue
தஞ்சை அருகே நடைபெற்ற திமுக பொது கூட்டத்தில் திமுக அமைச்சரை மேடையில் வைத்தே கேள்விகளால் கிழித்த திமுக எம்எல்ஏ.,வாழ் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ அசோக்குமார், "அதிகாரிகள் சொல்வது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதையை இல்லை.
கட்சியில் தகுதியுடைய உறுப்பினர்களுக்கு கிராம உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வேலை கொடுக்க சொல்லி பரிந்துரை கொடுத்தேன். ஆனால், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் அன்பில் மகேஷ் இடமும் இது குறித்து தெரிவித்தேன். ஆனால் நாங்கள் கொடுத்த பரிந்துரையை அப்படியே கிடப்பில் போட்டு உள்ளார் மாவட்ட ஆட்சியர்.
தொகுதியில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகளை ஆலோசனை செய்யாமல் அதிகாரிகளே தீர்மானித்து விடுகின்றனர்.
அமைச்சராகிய அன்பில் மகேஷ் நீங்களும், எங்களிடம் எதையும் கலந்து ஆலோசனை செய்வதில்லை. அமைச்சராகிய உங்களை வரவேற்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து, பல மணி நேரம் நாங்கள் காத்திருக்கின்றோம்.
ஆனால் நீங்கள் நிகழ்ச்சிக்கு வந்தால், ரிப்பனை வெட்டிவிட்டு உடனே புறப்பட்டு சென்று விடுகிறீர். நிர்வாகிகள் அளிக்கும் சால்வையை கூட நீங்கள் வாங்குவது இல்லை. இப்படி இருந்தால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எப்படி ஓட்டு வாங்க முடியும்" என்று சரமாரியாக அமைச்சர் அன்பில் மகேஷ்-யை திமுக எம்எல்ஏ அசோக்குமார் விமர்சித்து பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பேராவூரணி எம்எல்ஏ.,வை, நீ என்ன மதிமுகவில் இருந்து தானே வந்த. சும்மா உக்காரு என்றார் எம்எல்ஏ அசோக்குமார்.
English Summary
pattukottai DMK Minister and DMK MLA speech issue