முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி., எதில் தெரியுமா?!
pm modi first place in india news report
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வந்த நிலையில், இந்தியாவின் அதிகாரமிக்க 100 தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் பட்டியலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அண்மையில், 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருப்பதும், உக்ரேனில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்பது மற்றும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் செல்வாக்கினை உயர்த்தி இருப்பதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த நாளிதழின் பட்டியலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டாவது இடத்திலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மூன்றாவது இடத்திலும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நான்காவது இடத்திலும் உள்ளனர். மேலும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 5வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு பட்டியலில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 13 ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
English Summary
pm modi first place in india news report