ஜி 7 மாநாடு : இரு முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!
PM Modi Meets Two World Leaders in G7 Conference in Italy
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய ஏழு நாடுகளின் கூட்டமைப்பே ஜி 7 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் பசனோ நகரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்த 7 நாடுகளும் பங்கேற்கும் ஜி 7 அமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்களும், கத்தோலிக்க மத குரு போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடி அங்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் தலைமை மத குரு போப் பிரான்சிஸ் மற்றும் பல தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi Meets Two World Leaders in G7 Conference in Italy