இந்தியா புத்தரை கொடுத்துள்ளது.. யுத்தத்தை அல்ல - வியன்னாவில் பிரதமர் மோடி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக ரஷியா சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நேற்று (ஜூலை 10)  விமானம் மூலம் ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்த பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விவகாரங்களை ஆலோசித்தார். 

இதையடுத்து ஆஸ்திரியா  வியன்னாவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, " இந்தியா மிக உயரிய இலக்குகளை எட்டியுள்ளதோடு, எங்களின் அறிவாற்றலை நாங்கள் உலகுக்கும் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா இந்த உலகுக்கு புத்தரை தான் கொடுத்துள்ளது. யுத்தத்தை கொடுக்கவில்லை. 

இந்தியாவும், ஆஸ்திரியாவும் ஜனநாயகப் பண்புகளில் ஒத்திருக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சட்டத்தின் மீது நமக்கிருக்கும் மரியாதை ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்வதோடு, பல மொழிகளின் கலாச்சாரங்கள் மற்றும் பன்முகத் தன்மையை நாம் கொண்டாடுகிறோம் 

சமீபத்தில் தான் இந்தியாவில் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நடைபெற்றது. அதில் சுமார் 8000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், 650 மில்லியன் வாக்காளர்கள் என்று மிகப் பெரிய அளவில் நடந்த தேர்தலில் சில மணி நேரங்களுக்குள் முடிவுகள் வெளியாகி விட்டன. 

இதையடுத்து தொடர்ந்து மூன்றாவது  முறையாக ஒரே கட்சி சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாம் இந்தியாவை சிறப்பாக முன்னேற்றி உள்ளோம். இப்போது உலகப் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கும் நாம், விரைவில் 3ம் இடத்திற்கு முன்னேறுவோம்" என்று பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Speech At Vienna Austria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->