மே 30ல் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை.. இரண்டு நாட்கள் தியானத்தில் ஈடுபடப்போவதாக தகவல்..! - Seithipunal
Seithipunal



பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி மே 30ம் தேதி கன்னியாகுமரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரு தினங்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அவர் தியானம் செய்ய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சில மாநிலங்களில் விறுவிறுப்பான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக 2019ம் ஆண்டு நாடாளுமன்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போதும் பிரதமர் மோடி இமயமலைக்கு பயணம் சென்று அங்குள்ள குகை ஒன்றில் தியானம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்போது கேதார்நாத் சிவன் கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தார்.

இந்நிலையில் தற்போதும் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்போது பிரதர் மோடி கன்னியாகுமரி வரவிருக்கும் செய்தி தற்போது அனைவர் கவனத்தையும் கவர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi will visit to Kanyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->