எனக்கு எந்த நடுக்கமும் இல்லை - நடிகர் விஷால்.!
actor vishal speech about health condition
தென்னிந்திய சினிமா நடிகரான விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கியபடி பேசவும் தடுமாறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஷால் நேற்று 'மதகஜராஜா' படத்தின் சிறப்புக் காட்சியை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அவர் பேசியாவது:-
"நிறைய பேர் இவர் மூன்று மாதம், ஆறு மாதம் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று கூறினர். இப்போது அந்தமாதிரி எந்த நடுக்கமும் இல்லை. மைக் சரியாகதான் இருக்கிறது. எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரொம்ப நன்றி. சாகும்வரை உங்கள் அன்பை நான் மறக்க மாட்டேன்' என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor vishal speech about health condition