தடகள வீராங்கனையை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு!
Athlete sexually assaulted by 64 men SIT formed
தடகள வீராங்கனை பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் தொடர்புடைய காதலன் பயிற்சியாளர், சக விளையாட்டு வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது தடகள வீராங்கனை இளம் பெண் ஒருவர், இவர் தான் சிறுமியாக இருக்கும்போது பல்வேறு நபர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குழந்தைகள் நலக் கமிட்டியில் புகாரளித்திருந்தார். அந்த புகாரில் அந்த வீராங்கனை தனது 13 வயது முதல் 5 ஆண்டுகளாக இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்தநிலையில் முதற்கட்ட விசாரணையில் இந்த வழக்கில் 60க்கும் மேற்பட்டோர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பத்தனம்திட்டாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் பரபரப்பை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தநிலையில் பள்ளி மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது.அவர்களின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Athlete sexually assaulted by 64 men SIT formed