பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்!....எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


நாட்டின் பிரதமராக 3வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், கவர்னர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் நரேந்திர மோடி ஜி என்றும், நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரதமர் மோடிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பாஜக அல்லாத முதலமைச்சர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modis 74th Birthday MP Rahul Gandhi Wishes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->