#திருப்பூர் || பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி 19 தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நேர்ந்திரா மோடியை  உதயநிதி ஸ்டாலின் டில்லிக்கு நேரில் சென்று  அழைஊஉ விடுத்தார். உதயநிதியின் அழைப்பை ஏற்று பிரதமர் நரனேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த பயணத்தின் போது திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 19ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மோடி பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக  திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேதி  ஒதுக்கிய பிறகு பொதுக்கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM narendira modi tirupur BJP rally Postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->