என்எல்சியே வெளியேறு | டிவிட்டரில் பாமகவினர் ட்ரண்ட் - அன்புமணி இராமதாஸ் நடைபயணம்! - Seithipunal
Seithipunal


25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இன்றும், நாளையும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனம் அதன்  முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தப்படவுள்ளது.

இது தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்களை பறிக்கவுள்ளது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதே சமயத்தில் கடலூர்  மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் என்.எல்.சி நிர்வாகத்தை வெளியேற   மேற்கொண்டுள்ளார்.

மேலும், சமூகவலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில்  #என்எல்சியே_வெளியேறு #PMKAgainstNLCLandGrab ஆகிய ஹேஷ்டேக் மூலம் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Against NLC Land Grab


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->