10 மாதம் சைலன்ட் மோடில் இருந்த CM ஸ்டாலின்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்க - அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
PMK Anbumani Ramadoss Condemn to DMK MK Stalin
திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சுரங்கத்திற்காக ஏற்கெனவே 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்பட்ட நிலையில், மேலும் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அழிக்க துடிப்பவர்களுக்கு திராவிட மாடல் அரசு துணையாக உள்ளது.
நான் பதவியில் உள்ள வரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கங்களை அனுமதிக்க மாட்டேன் எனும் முதல்வர், நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்தை எதிர்க்காதது ஏன்? மதுரைக்கு ஒரு நீதி, கடலூருக்கு ஒரு நீதி என முதல்வரின் இரட்டை வேடம் தெரியவருகிறது.
ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பேரவை நடத்துவோம், நேரலை செய்வோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி உள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதானியிடம் நேரிடையாக மின்சாரம் வாங்கவில்லை என்பது, லஞ்சத்தை கையில் வாங்க மாட்டேன், மேஜையில் வைத்துவிட்டு போ என்பது போல் உள்ளது.
அதானி விவகாரத்தில் எந்த வகையான விசாரணையும் ஆதரிக்கிறோம். சூரிய ஒளி மின்சார கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது என அமெரிக்க நீதிமன்றம் பதிவு செய்துள்ள வழக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் தயாரா? என்ற என் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK MK Stalin