சென்னை || பாமக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.! - Seithipunal
Seithipunal


பாமகவின் வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் வி.எஸ். கோபு, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"சென்னை மாநகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் வி.எஸ். கோபு பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,

இன்று  (02.04.2022) சனிக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். 

அவருடன்  பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்"

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk announcement april 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->