அழித்து படுகொலை செய்யும் திமுக அரசு - டாக்டர் இராமதாஸ்!
PMK Founder Ramadoss Says that To Ensure 69 Percent Reservation Castewise Census is Need
69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திமுக அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை. சமூக நீதியைப் பாதுகாக்க, சமத்துவத்தை ஏற்படுத்த அனைத்து வழிகளும் இருந்தும் திமுக அரசு அதை அழித்து சமூக நீதியைப் படுகொலை செய்து கொண்டுள்ளது.
இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் நாம் தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெருமை நீடிக்க வேண்டுமென்றால், 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2010ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் அதை இன்னும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எனவே அதை எதிர்த்து தொடரப்பட்டவழக்குகள் விசாரணைக்கு வந்தால் நிச்சயம் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டுவிடும். எனவே இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியது கட்டாயம்.
கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படாதது எவ்வளவு மோசமோ, அதைவிட மோசமானது தான் அந்த சமூகங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப் படாததும். நூற்றுக்கணக்கான சாதிகளை ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து, மிக குறைவான இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்துவது உண்மையான சமூகநீதி அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
PMK Founder Ramadoss Says that To Ensure 69 Percent Reservation Castewise Census is Need