அரசியல் ட்விஸ்ட்.. ஈ.பி.எஸ் உடன் பா.ம.க எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு.!!
Pmk MLAs met AIADMK general secretary EPS
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென சந்தித்துள்ளனர்.
நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாமக கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் பாமக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உடன் பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் சுமார் 25 நிமிடம் பேசி உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூழலில் பாமக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pmk MLAs met AIADMK general secretary EPS