நாளை மறுநாள் போராட்டம் - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"புதுவையில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று அதன் நிறுவனர் கடந்த 29-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கை இந்திய அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இது அப்பட்டமாக இந்தித் திணிப்பு என்பதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியில் மட்டுமே பதிவேடுகள் என்ற சுற்றறிக்கை அங்கு பணியாற்றும் இந்தி பேசாத பணியாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் காரணமாக ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; பதிவேடுகளை பராமரிப்பதில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி ஜிப்மர் மருத்துன நிறுவனம் முன் நாளை மறுநாள் (11.05.2022) புதன் கிழமை காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தபடும். 

பாட்டாளி மக்கள் கட்சியின் புதுவை அமைப்பாளர் கணபதி தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைத்து நிலை பா.ம.க.வினரும் பங்கேற்பார்கள்"

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk protest announce for jipmer hindi issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->