முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி கண்டனம்தெரிவித்த ஜான் பாண்டியன்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. நிறுவனர் டாக்டர். திரு. ராமதாஸ் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது கண்டனத்திற்குரியது என்று, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது மூத்த அரசியல்வாதியான திரு .ராமதாஸ் அவர்களை சிறுமை படுத்தும் விதமாக கருதுகிறேன். இதற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதித்து அவர்கள் கூறிய கருத்துக்கு தகுந்த தீர்வு காண வேண்டும் என்பதே ஜனநாயகம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Arikkai John Pandiyan condemn to CM Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->