எச்சரிக்கையா இருங்க! சனாதனத்தை அழிக்கவே "I.N.D.I.A" கூட்டணி.! கொளுத்தி போட்ட நரேந்திர மோடி! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய பிரதேசம் மாநிலம் பீனா நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் "டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றியாகும். எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி உள்ள இண்டியா கூட்டணிக்கு ஒரு தலைவர் கிடையாது. இந்திய கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக மறைமுக செயல் திட்டத்தினை கொண்டதுதான் இண்டியா கூட்டணி.

இந்தியாவில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்கள் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சனாதன தர்மம் சுவாமி விவேகானந்தருக்கும் திலகருக்கும் உத்வேகம் அளித்தது. 

ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது சனாதன தர்மத்தின் மீது பகிரங்கமாக குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது. இன்று சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் நாளை நம் மீதும் தாக்குதல் நடத்தலாம். இந்த தேசத்தை நேசிக்கக் கூடிய அனைத்து சனாதனிகளும் இத்தகையவர்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு சனாதனியும் இந்தியா கூட்டணிக்கு எதிராக போராட வேண்டும்" என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi accuses India alliance to eliminate SanatanaDharma


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->