குஷ்பூ குறித்து அவதூறு.. போலீசில் பரபரப்பு புகார்.! சிக்குவாரா திமுக நிர்வாகி.?!
police complaint against saidhai sadik
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து மிகவும் ஆபாசமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த பதிவு அனைவரையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. இப்படி அவதூறாக பேசிய அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கைகள் எழுந்தது.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி குஷ்புவிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டார். இத்தகைய சூழலில், சைதை சாதிக் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் அப்பகுதி பாஜக நிர்வாகிகளுடன் சென்று காவல் உதவி ஆய்வாளர் முருகனிடம் மனு கொடுத்தனர்.
English Summary
police complaint against saidhai sadik