தாய்மொழி தெலுங்கு: கருணாநிதி குடும்பம் ஏன் பேனிக் ஆகிறார்கள்? அவமானமா? அருவருப்பா? - அர்ஜுன் சம்பத் விளாசல்! - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எப்போதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினரின் தாய்மொழி சர்ச்சை கிளப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற திசை திருப்பல்களை தமிழக அரசியல் களம் எதிர்நோக்குகிறது...

தனது தாய்மொழி தெலுங்கு என்பதை பறைசாற்றுவதற்கு இந்தக் குடும்பம் ஏன் இவ்வளவு பேனிக் ஆகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு விளங்குவதில்லை 

தாய்மொழியை தெலுங்காக கொண்டிருப்பது மிகப்பெரிய குற்றமா? அவமானமா? அருவருப்பா? 

இந்த மண்ணின் மேன்மைக்கு மாபெரும் தொண்டாற்றியவர்கள் தெலுங்கர்கள்... அவர்களை தமிழர்களின் எதிரி என சித்தரிப்பவர்களை விட... 

"தெலுங்கர்" என்னும் அடையாளத்தை மறைத்து வாழ்பவர்களே அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் பெரும் எதிரி...

மூன்றாம் தேதி கஸ்தூரி அவர்களின் பேச்சில் அவர் கூற விரும்பிய சாராம்சம் இதுதான் 

"தெலுங்கை தாய்மொழியாக கொண்ட கருணாநிதி குடும்பத்தினருக்கு, பிராமணர்களை தமிழர் அல்ல எனக் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? "

இதற்கு தெலுங்கு பேசும் மக்களை தவறாக தூண்டிவிட்டு... அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மடைமாற்றி சித்தரித்து... தமிழக மக்களை லட்சத்தி ஓராவது முறையாக ஏமாற்றியிருக்கிறது திராவிடிய ஈக்கோ சிஸ்டம்...

தமிழகத்தில் தெலுங்கு பிராமணர்களும் அதிகப்படியாக திராவிட ஹயனாக்களின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்....

அவர்களுக்கும் சேர்த்தே இந்த போராட்டம் கட்டமைக்கப்பட்டிருந்தது....

வீணாக திராவிட திசை திருப்பலுக்கு தெலுங்கு பேசும் தமிழக மக்கள் இறையாக வேண்டாம்...

உங்கள் முதல் எதிரி திமுக வின் தலைமை குடும்பம் தான்... 

தமிழோ, தெலுங்கோ எதைப் பேசினாலும் திமுக குடும்பம் மனித இனத்திற்கே தகுதியற்றவர்கள்... லட்சக்கணக்கான உயிர்கள் இலங்கை மண்ணில் பறிபோவதற்கு காரணமானவர்கள் 

எந்த மொழி பேசினாலும் திருடர்கள் திருடர்களே..." என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IMK Arjun Sambath DMk MK Stalin Udhay Telugu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->