முன்னாள் தமிழக எம்பி, உள்துறை செயலாளர் மறைவு! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!   - Seithipunal
Seithipunal


முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மலைச்சாமி (Retd. IAS) இன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். இவர் தமிழக உள்துறை செயலாளரகவும் மாநில தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், கே.மலைச்சாமி (Retd. IAS) மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.கே.மலைச்சாமி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

திரு.கே.மலைச்சாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இதேபோல், பாஜகவின் ஹெச்.ராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழக உள்துறை செயலாளரகவும் மாநில தேர்தல் ஆணையராகவும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த எனது நீண்ட கால நண்பர் திரு.மலைச்சாமி IAS அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அன்னாரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா ஈசன் பாதமடைய ப்ரார்த்திக்கிறேன்.

வி.கே.சசிகலா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு மாநில முன்னாள் தேர்தல் ஆணையரும், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர்.கே.மலைச்சாமி (Retd. IAS) அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரு.மலைச்சாமி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்.  திரு.மலைச்சாமி அவர்கள் நேர்மையாகவும், மிகுந்த ஈடுபாட்டுடனும் பணியாற்றியதை கண்ட அம்மா அவர்கள், அவரை பல்வேறு பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்த்தார். அதேபோன்று திரு.மலைச்சாமி அவர்கள் கழக பணிகளையும் திறம்பட ஆற்றினார்.

அன்பு சகோதரர் திரு.மலைச்சாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Sasikala HRaja Condolence k Malaisamy IAS Death 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->