சவால் விட்ட கையோடு ஆதாரங்களை மாறி மாறி கொடுத்த அதிமுக, திமுக!
pollachi issue TN assembly DMK ADMK
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் நேற்று பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 நாள் கழித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், நான் ஆதாரம் காட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சபாநாயகரிடம் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை இன்று திமுக, அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
இதேபோல், பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
English Summary
pollachi issue TN assembly DMK ADMK