மக்களவைத் தேர்தலில் நிர்மலா சீதாராமன்.!! உறுதிப்படுத்திய மத்திய அமைச்சர்.!!
PrahaladJoshi said niramala sitaraman contest in loksabha election
மத்திய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிர்மலா சீதாராமன் ஒரு மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் விமர்சித்தாரம்மன் போட்டியிட்டால் அவர் தமிழகத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
PrahaladJoshi said niramala sitaraman contest in loksabha election