என் தந்தை இறப்பிற்கு காங்கிரஸ் செயற்குழு கூடவில்லையே! டெல்லி அரசியலில் புதிய பூகம்பம்!
Pranab Kumar Mukherjee Daughter condemn to Congress
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழு கூடியது, ஆனால், எனது தந்தை முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இந்த செயற்குழு கூட்டம் கூடவில்லையே என்று, அவரின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எனது தந்தை மறைந்தபோது, காங்கிரஸ் செயற்குழு கூட வேண்டும் என்பதைக் கூட கருதவில்லை. ஆனால், முன்பு கே.ஆர். நாராயணனின் மறைவுக்குப் பின்னர் அப்போதைய செயற்குழு கூட்டியதை அவரது நாட்குறிப்புகள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது ஒரு சிறந்த யோசனை என பாராட்டிய அவர், "அப்பா குடியரசுத் தலைவராக இருந்தபோது மன்மோகன் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்பினார், ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை," என குறிப்பிட்டு உள்ளார்.
இதனிடையே, பாஜகவின் சி.ஆர். கேசவன் இதற்கு பதிலளித்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. அதில், "நரசிம்மராவுக்கு காங்கிரஸ் நினைவிடம் அமைக்கவில்லை. அவர் நினைவிடம் பிரதமர் மோடி தலைமையில்தான் உருவாக்கப்பட்டது," என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே காரசாரமான விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.
English Summary
Pranab Kumar Mukherjee Daughter condemn to Congress