நானே அரசியல் கட்சி தொடங்கினால் என்ன? களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐபேக் என்ற நிறுவனத்தின் மூலம் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பிரபல காட்சிகள் ஆட்சி அமைத்தார்கள்  தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார். அப்போது, காங்கிரசில் இணைய வேண்டும் என்று சோனியா விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்தார்.

இந்நிலையில், இன்று காலை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு, அவர் அரசியல் கட்சியை தொடங்குகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த டிவிட்டர் பதிவில், "ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இதில் பல ஏற்ற தாழ்வு மிகுந்த பாதையில் பயணித்தேன்.

பிரச்சினைகளை அறிந்து கொள்ள மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன். இத்தனை பீகாரில் இருந்து தொடங்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth kishore twit about people meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->