ஈரோட்டில் சோகம்!...யானை மிதித்ததில் தோட்டத்திற்கு காவலுக்கு இருந்த விவசாயி பலி! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் அடுத்த குத்தியாலத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாறன்.
இவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் இவர் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில்,
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் மாறனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது.

இதனால் விவசாயி மாறன் சோளக்காட்டில் காவலாளியாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு  சோளக்காட்டில் வழக்கம் போல் காவலுக்காக படுத்திருந்தார். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த ஒரு காட்டு யானை பயிர்களை நாசம் செய்தது.

இதனைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த மாறன் அங்கிருந்து தப்பி வெளியேற முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தும்பிக்கையால்  தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாறன்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy in erode the farmer who was guarding the garden was killed by an elephant


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->