டெல்லியில் நிலைமை மிக மோசம்!...காற்று தரக் குறியீட்டில் உச்சம் தொட்டது தரக் குறியீடு! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் 3வது நாளாக காற்றின் தரம்  மிக மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 488 ஆக பதிவாகி உள்ளதாக  மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்றும் காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் புகை மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

காற்று தரக் குறியீட்டில்  0 முதல் 50 வரை இருந்தால் காற்று தரத்துடன் உள்ளது என்றும்,  51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கும்.

இதே போல், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம் என்றும்,  201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் மற்றும்  401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The situation in delhi is very bad the air quality index has reached a peak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->