உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! நாள் குறித்த வானிலை ஆய்வு மையம்!
Chennai IMD Weather Update
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த செய்திக்குறிப்பில், வருகின்ற நவ. 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாள்களில் வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த தகவலின்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நவ. 25 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுவையின் காரைக்கால் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
English Summary
Chennai IMD Weather Update