பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி,மொத்த சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாய் பெரும்பாலான சொத்து வங்கி டெபாசிட் தொகையாக உள்ளது. இதுபோக அசையா சொத்துக்கள் ஏதுமில்லை. குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்த தன்னுடைய நிலத்தை பிரதமர் மோடி நன்கொடையாக வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. பங்குகள், மியூச்சுவல், ஃபண்ட் பத்திரங்கள் போன்ற சொத்துக்களை முதலீடு செய்யவில்லை.

2022 மார்ச் 31 வரை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2,23,82,504. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 26.13 லட்சம் அதிகமாகும். 

மேலும், கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத்துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி. பாலிசிகளும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister Modi total assets value


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->