மத்திய அரசை போட்டுத் தாக்கிய பிரியங்கா காந்தி!...நிலச்சரிவு சம்பவத்தில் இது தான் மக்களின் நிலை!
Priyanka gandhi attacked the central government this is the condition of the people in the landslide incident
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி அங்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை முன்னிறுத்துவதில் தீவிரம் கட்டி வந்த தற்போது அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் 23-ம் தேதி, வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து 28-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு மிக சில நாட்களே உள்ள நிலையில், வயநாட்டில் 5 நாட்கள் பயணமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் படி, நேற்று புல்பள்ளி, கெனிச்சிரா, படிச்சிரா, முட்டில் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாகவும், மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்க தவறவில்லை என்று கூறிய அவர், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாக சாடினார்.
English Summary
Priyanka gandhi attacked the central government this is the condition of the people in the landslide incident